அஜித்திற்கு பாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித்திற்கு பாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள அஜித்தின் நேர் கொண்ட பார்வை, திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் மறுதயாரிப்புகாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.  

Comments