தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தது.இந்நிலையில் இந்த படத்தில் நடித்த தர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது இவர் ஹரிஷ்ராம் இயக்கியுள்ள தும்பா படத்தில் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது.அதில் அவர் சில இயக்குனர்கள் என்னை ஒதுக்கியுள்ளனர்.அதற்கான காரணம் எனது ஒல்லியான தோற்றம் மற்றும் இந்த நிறம் தான்.மேலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த ஒருவர் இந்த இயக்குனர் தான் என கூறும்பொழுதே கண்கலங்கியுள்ளார்.அவருக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனரை அவர் மனப்பூர்வமாக வணங்குவதாக கூறியுள்ளார்.
Comments
Post a Comment