பரதேசி படம் மூலம் திரைக்கு வந்த நடிகை ரித்விகா, பிக்பாஸ் -- 2வது சீசனில்
வெற்றியாளரானார். தற்போது விஜய் சேதுபதியுடன், நம்மவன் படத்தில்
நடிக்கிறார்; அவருடன் பேசியதிலிருந்து:சினிமாவில் உங்கள்
பின்னணி?சினிமாவில், எங்கள் குடும்பத்தில் என்னைத் தவிர யாரும் இல்லை.
பெற்றோர் முதலில் மறுத்தனர். 'சினிமா வேண்டாம்; அது, நிரந்தரமான வேலை
இல்லை' என, அப்பா கூறினார். பின், அவர் சினிமாவை ஏற்றுக்
கொண்டார்.அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்?அமலாபால் உடன், கடவர் படத்தில்
நடிக்கிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்சேதுபதியுடன் நம்மவன்
படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.எந்த மாதிரியான பாத்திரங்களை ஏற்க
விரும்புகிறீர்கள்?துணை பாத்திரங்களில் தான், அதிகம் நடித்துள்ளேன்.
சிறிது நேரம் வந்தாலும், நாம் பேசப்படுகிறோம். விஜய்
சேதுபதி போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது, துணை பாத்திரமாக
இருந்தாலும், நாம் பேசப்படுவோம். நாயகி பாத்திரம் இல்லை என்றாலும், இது
போன்ற பாத்திரங்களை, நான் தவறவிடுவதில்லை.பிக்பாஸ் - 3 துவங்குகிறது;
அதைப்பற்றி கூறுங்கள்?ஆமாம்; நிறையவே எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த
சீசனில், பிக்பாஸ் வீட்டுக்கு செல்வேனா எனத் தெரியாது.
இறுதியில் அதுபற்றி தகவல் கிடைக்கலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு என, எப்போதாவது நினைத்ததுண்டா?அந்த மாதிரி, ஒரு போதும் நினைக்கவில்லை. வெற்றி பெறுவேன் என்றும் நினைக்கவில்லை. துவக்கத்தில், நான்கு வாரம், ரொம்பவே அமைதியாகவே இருந்தேன். நான் வெளியே எப்படி இருப்பேனோ, உள்ளேயும் அப்படியே இருந்தேன்.
இது மட்டுமே, சில நேரங்களில் தவறாக நடக்கிறோமோ என எண்ணத் தோன்றியது; இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் நான், நானாகவே இருந்தேன்.உண்மையை சொல்ல வேண்டும்; பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்ட படப்பிடிப்பா?முதல் சீசன் நிகழ்ச்சியை பார்த்ததும், நானும் அப்படித் தான் நினைத்தேன். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கும் படப்பிடிப்பு என்றே நினைத்திருந்தேன். ஆனால், நேரடியாக பார்த்த போது எதிர்பார்த்ததை விட வேறுமாதிரி இருந்தது. அது, திட்டமிட்ட படப்பிடிப்பு இல்லை.
நடிகையருக்கு சம்பளம் குறைவாக இருக்கிறது என்ற நிலையில், துணை பாத்திரங்களுக்கு சம்பளம் சரியாக கிடைக்கிறதா?என்னை பொறுத்தவரை, அவ்வளவு தான் தர முடியும் என நினைக்கிறேன். இப்போது தயாரிப்பு செலவு மிகவும் அதிகரித்து விட்டது. சில சமயம் நஷ்டமும் ஏற்படுகிறது. துணை பாத்திரங்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும், சரியாக கொடுத்து விடுகின்றனர்.புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு உங்கள் ஆலோசனை?சினிமாவுக்கு வருபவர்களுக்கு, எதையும் ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
முதல் படத்திலேயே பிரபலமாகி விட வேண்டும் என நினைக்கின்றனர். அந்த மாதிரி யாருக்கு கிடைக்கும். சூப்பர் ஸ்டாருக்கே அப்படி கிடைக்கவில்லை. சினிமா, கடல் மாதிரி; பொறுமை இருந்தால் சாதிக்கலாம்.
இப்போது வருபவர்களுக்கு பொறுமை குறைவு. நான் சீனியர் நடிகை கிடையாது. என் அனுபவத்தில், இதை நான் கூறுகிறேன்உங்கள், 'ரோல்மாடல்' யார்?எனக்கு ரொம்ப பிடித்தவர் சரிதா. அவரது படங்களை பார்த்து தான், வளர்ந்தேன். அவர் நடித்த படங்களை, 'டிவி'யில் போட்டால் அப்படியே அமர்ந்து விடுவேன்; ரேவதியும் பிடிக்கும். உங்களுடையது காதல் திருமணமாக இருக்குமா?எனக்கே தெரியவில்லை. இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை.-ரித்விகா .

Comments
Post a Comment