லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் இருந்து வெளியேறிய வாணி போஜன்!

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான வாணி போஜன் இயக்குநர் லோகேஷ் இயக்கும் ‘என் 4' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதைத்தவிற வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது  லோகேஷ் இயக்கும் ‘என் 4' படத்தின் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments