ஹனிமூன் நகரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் ஜோடி!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஏகப்பட்ட படங்கள் கையில் இருந்தும் அவ்வபோது தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் வெளிநாட்டுக்கு ட்ரிப் அடித்துவிடுகிறார்.விக்னேஷ் சிவன் - நயன்தாரா பல ஆண்டுகளாக காதலித்து வருவதோடு ஒரே வீட்டி லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், புதுமண தம்பதிகள் தேனிலவு செல்ல தேர்வு செய்யும் நகரமான சாண்டோரினி என்ற நகரத்திற்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சுற்றுலா சென்றுள்ளார்கள்.கிரேக்க நாட்டில் உள்ள இந்த நகரம், ஹனிமூன் செல்வதற்கான ஸ்பெஷல் நகரமாகும். கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் இருந்து சானிடோரினி நகரத்திற்கு செல்வதற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட விமான டிக்கெட்டை விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, “நான் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவுப்பகுதிக்கு பறந்து கொண்டிருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விக்னேஷ் சிவனின் இந்த பதிவால், நயன்தாராவுக்கும் அவருக்கும் இந்த ஆண்டு திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் ஹனிமூன் நகரத்திற்கு சென்றிருப்பதால், ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டிருப்பார்களே, என்று ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளார்கள்.

Comments