ஒரு காலத்தில் லவ் சென்ட்டிமென்ட் பட இயக்குனராக இருந்த எழில், தற்போது காமெடி பட இயக்குனராகிவிட்டார். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை தொடங்கி வெள்ளக்காரதுரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தேசிங்கு ராஜா, சரவணன் இருக்க பயமேன் என வரிசையாக காமெடி படம் எடுத்தார்.
தற்போது அவர் ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் ஈஷா ரெப்பா, நிகிஷா படேல். சாக்ஷி அகர்வால் என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சத்யா இசை அமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக பிரபல விநியோகஸ்தர் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்து வெளிவந்த திகில் படத்தின் டைட்டிலாகும். பசி துரை இயக்கி இருந்தார். படித்து விட்டு சென்னையில் வேலை தேடும் ஜி.பி.பிரகாசுக்கு திடீரென்று ஒரு வெளிநாட்டு வேலை கிடைக்கிறது. நிறைய பணம் கிடைக்கும் வித்தியாசமான வேலை அது. அதை ஜி.பிரகாஷ் எப்படிச் செய்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம்.

Comments
Post a Comment