நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் அறிமுகமாகி 3 படங்களில் நடித்துள்ள போதிலும் இன்னும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.இருப்பினும் தனது அடுத்த முயற்சியாக ஜி எண்டர்டைம்மன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பூபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரோணிகா நடிக்க உள்ளார்.
மேலும் அர்ச்சனா, முனிஸ்காந்த், வம்சி கிருஷ்ணா, அழகம்பெருமாள் உள்ளட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தடம் பட இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தனது அப்பாவிடம் போலீஸ் கதாபாத்திரத்திற்கான டிப்ஸ்களை கேட்டு வாங்கி உள்ளார்.
Comments
Post a Comment