தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் பிகினி அணிந்தால் என்னம்மா, கல்யாணமான பொண்ணு பிகினி போடலாமா என்று கேட்டு நெட்டிசன்கள் விளாசுகிறார்கள். குட்டியான கவுன் அணிந்தாலும் திருமணமான பிறகும் இப்படியா கவர்ச்சியாக உடை அணிவது என்று கிண்டல் செய்வதுடன், கேவலமாக பேசுகிறார்கள். இந்நிலையில் இது குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,
முன்பெல்லாம் யாராவது என்னை கலாய்த்தால் வருத்தப்படுவேன். நம்மிடம் தான் ஏதோ பிரச்சனையா என்று யோசிக்கும் அளவுக்கு கவலைப்படுவேன். காலையில் எழுந்த உடன் யாராவது கலாய்த்துள்ளார்களா என்று சமூக வலைதளங்களில் பார்ப்பேன். அதனால் மனதளவில் காயப்பட்டேன். தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்தேன். அந்த சூழலில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யாருக்கும் அறிவுரை வழங்கும் அளவுக்கு நான் இல்லை.
காலப் போக்கில் நான் மாறிவிட்டேன். அதன் பிறகு யார் கலாய்த்தாலும் நான் கண்டுகொள்வது இல்லை. தற்போது எல்லாம் யாராவது என்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது. அதை பார்த்து கோபம் வருவது இல்லை. யார் கலாய்த்தாலும் நான் கண்டுகொள்வது இல்லை.
நான் ஒரு ட்வீட் போட்டாலோ இல்லை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டாலோ நிச்சயம் கலாய்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும். கலாய்ப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும். என்ன நடக்கும் என்று தெரிந்தே தான் ட்வீட் செய்கிறேன், புகைப்படங்களை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
சமந்தா சொல்வது மிகச் சரி. அவர் புகைப்படங்கள் வெளியிட்டாலே அதை கலாய்ப்பதற்கு என்றே பலர் இருக்கிறார்கள். முகம் தெரியாத நெட்டிசன்களுக்காக பயந்து என்னால் வாழ முடியாது. அவர்களுக்காக உடை அணிய முடியாது என்கிறார் சமந்தா. சமந்தா மட்டும் அல்ல பல நடிககைள் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment