பல தடைகளை உடைத்து காதல் திருமணம் செய்த ஷர்மிளா தாபா!

ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தாபா. நேபாளியை சேர்ந்த இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரிடம் பல ரசிகர்கள் எப்போது கல்யாணம் என கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்காமல் இருந்த இவர்  6.6.2019 சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் இது பத்து வருட காதல் என்றும் எத்தனையோ தடைகள் பிரச்சனைகளைத் தாண்டி சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
பிருந்தா மாஸ்டர் ,பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குனர்கள் உடன் பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments