தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். இதுவரை 1579பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது..
நடிகர் சங்க தேர்தல்..பரபரப்பு புகைப்படங்கள் பார்வையிட இங்கே கிளிக்செய்யவும்
 
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக தேர்தலை நடத்த உதவிய காவல்துறைக்கு சுவாமி சங்கரதாஸ் அணியினர் நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்க தேர்தலில் 1587 பேர் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்..
 
சென்னையில் நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 1,579 வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தம் 3,148 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை 1,579 வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
 
இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Comments