ஆடை படத்தில் முக்கிய காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் அமலாபால். இந்த புகைப்படம் சில தினங்களாக நெட்டில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்கின்றனர். அமலாபால் ஸ்டில்லை வைத்து வடிவேலு கமென்டுடன் வீடியோ பகிர்ந்தனர். அதைக் கண்ட பட இயக்குனர் ரத்னகுமார் சிரிப்பை அடக்க முடியாமல் திக்குமுக்காடினார். பிறகு அந்த வீடியோவை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டதுடன் அதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து இயக்குனர் குறிப்பிடும்போது,’இப்போதெல்லாம் எந்த திரைப்படமாக இருந்தாலும் அதற்கு வடிவேலு வெர்ஷனும் கூடவே வந்துவிடுகிறது. ஆடை படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக உள்ளது. அதைப் பார்த்து என்னாலேயே சிரிப்பை அடக்க முடியாததால் நானே ஷேர் செய்திருக்கிறேன். பேச்சு சுதந்திரத்தை பற்றித்தான் இப்படம் பேசப்போகிறது. பேச்சு சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் ரத்னகுமார்.

Comments
Post a Comment