நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா, நாகசைதன்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ஓ பேபி. ஒரு பாட்டி, இளம் பெண்ணாக மாறுவதுதான் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதை. உருவத்தில் இளம் பெண்ணாகவும், மனதளவில் பாட்டியாகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல நிறுவனமான டகுபட்டி குடும்பத்திற்குச் சொந்தமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
அதனால், இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய வெங்கடேஷ், “நான் படத்தைப் பார்த்துவிட்டேன். சமந்தா மிக அற்புதமாக நடித்துள்ளார்,” என்றார். ராணா பேசுகையில், “சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 55வது வருட போஸ்டரில் என் படமோ, வெங்கடேஷ் படமோ, நாக சைதன்யா படமோ இல்லாமல் சமந்தா படம் வந்திருப்பது பெருமையான விஷயம். தன்னுடைய கடும் உழைப்பால்தான் சமந்தா இந்த இடத்தை அடைந்துள்ளார்,” என்று பாராட்டினார்.
நான் இதுவரை நடித்த படங்களிலேயே ஓ பேபி என்னுடைய சிறந்த படம்,” என்றார். ஓ பேபி படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். ஜுலை 5ம் தேதி இப்படம் வெளியாகிறது.
Comments
Post a Comment