அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கில மொழி படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. அவர் தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட் படங்களில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல மொழிகளில் நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை. இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
நான் நடித்த தி வெட்டிங் கெஸ்ட் படம் அண்மையில் அமெரிக்காவில் ரிலீஸானது. தற்போது என்னை தேடி ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்க்ரிப்ட் படிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன்.
அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. மற்றவர்கள் எதை வெற்றி என்று நினைக்கிறார்களோ அதில் இருந்து என் கருத்து மாறுபட்டதாக உள்ளது. நான் வெற்றிகரமான நடிகையான இதுவரை உணரவில்லை.
எந்த சாதனையை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேனோ அதை நான் இன்னும் செய்யவில்லை. அதற்கான நேரம் வரும்போதே நான் வெற்றி பெற்றவளாக உணர்வேன் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ராதிகா ஆப்தே தனது கெரியரில் அதிக வளர்ச்சி இல்லாவிட்டாலும் மெதுவாக சென்றே முன்னேறலாம் என்று பொறுமையாக உள்ளார். கதைக்கு தேவைப்பட்டால் நெருக்கமான காட்சிகள், கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ராதிகா ஆப்தே தயங்குவது இல்லை. சொல்லப் போனால் அவர் நடித்த சில காட்சிகளை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி அடைந்தது உண்டு.
Comments
Post a Comment