கடந்த வருடம் முழுவதும் செய்திகளில் பரபரப்பாக இடம் பிடித்த புருவ அழகியின் புதிய அவதாரம்!

கடந்த வருடம் முழுவதும் செய்திகளில் பரபரப்பாக இடம் பிடித்தவர் புருவ அழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியார். ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா வாரியர், அந்தப்படத்தில் நடிப்பால் ரச்கர்களை கவர தவறினாலும், தற்போது இந்தியில் கதாநாயகியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிப்பைத் தாண்டி இன்னும் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார் பிரியா வாரியார். மலையாளத்தில் தற்போது உருவாகியுள்ள 'பைனல்ஸ்' என்கிற படத்தில் டூயட் பாடல் ஒன்றை பாடியதன் மூலம் பின்னணி பாடகியாகவும் மாறியுள்ளார் பிரியா வாரியார்.

இந்த பாடலை நரேஷ் ஐயருடன் சேர்ந்து பாடியுள்ளார் பிரியா. பிரியா வாரியர் பாடிய டூயட் பாடலை வைத்தி சமீபத்தில் இந்தப்படத்தின் பாடல் டீசரை வெளியிட்டுள்ளனர். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

Comments