நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வேண்டும் என்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தாம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று அறிவித்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக வேண்டியும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டியும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ் மற்றும ரஜினி ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினார்கள். இதில் சத்தியநாராயண ராவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். அடுத்து இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ரஜினி ஈடுபட உள்ளார்.
Comments
Post a Comment