அஜித்துடன் ஆசை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த பூஜா பத்ரா இரண்டாவது திருமணம்!

அஜித்தின் ஆசை படத்தில் ஒடு பாடலுக்கும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் பூஜா பத்ரா. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது.
 
பூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அமெரிக்காவிலேயே தங்கி குடும்பம் நடத்தினார். 2010-ல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு இந்தியா திரும்பிவிட்டார்.
 
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான நவாப் ஷாவுக்கும், பூஜா பத்ராவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
 
தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பூஜா பத்ராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவாப் ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.

Comments