சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்துடன் நடிகர் பாக்கியராஜ் அணி சந்தித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், உதயா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றனர்.
நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசவில்லை என பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். விஷால் அணியினர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஐசரி கணேஷ் கூறினார்.
Comments
Post a Comment