என்.ஜி.கே’ திரைவிமர்சனம்!

செல்வராகவன்–சூர்யா கூட்டணியில் அரசியல் பின்னணி கதையை மையப்படுத்தி எடுத்துள்ள கதை என்.ஜி.கே. முதல் முறையாக இணைந்துள்ள செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா இந்த படத்தில் தனது ரெகுலர் போலீஸ் கெட்டப்பை விட்டு மாறாக முழு நேர அரசியல் வாதியாக மாறியதால் புதிய தலைவர் பிறந்து வந்துவிட்டார் என்றெல்லாம் ட்விட்டரில் பலர் கருது பதிவிட்டுள்ளார். படித்த இளைஞர் சூர்யா நன்றாக இயற்க்கை விவசாயம் செய்ய இதை பலரும் எதிர்க்கின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க எம்.எல்.ஏ விடம் உதவி கேட்கும் சூர்யாவை தனது கட்சியில் சேர சொல்கிறார் வேறு வழியில்லாமல் கட்சியில் தொடர்ந்து முன்னேற, அவர் நினைத்த இடத்தை என்.ஜி.கே அடைந்தாரா? என்பதே மீதி கதை.

எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு சூர்யா நடிப்பில் மிரட்டி விட்டார். கட்சியில் தொண்டனாக இருக்கும் சூர்யா பாத்ரூம் கழுவி முன்னேறுவது, சமீபத்தில் நடந்த ஒரு அமைச்சரின் பாலியல் கேஸ், யதார்த்தமான அரசியலில் இரண்டே கட்சிதான் போன்ற சில விஷயங்கள் படத்தில் கவனிக்க வைத்துள்ளது.
படத்தில் காதல், பேண்டஸி காட்சிகளைவிட படம் முழுவதும் அரசியல் காட்சிகள் கொஞ்சம் போர் தான். சாய்பல்லவியின் கதாபாத்திரம் சுமாராக இருந்தாலும் யதார்த்தமான நடிப்பில் அசத்தியுள்ளார். யுவனின் இசை தான் படத்திற்கு பலமே.
நிறைகள்
சூர்யாவின் நடிப்பு
ஒளிப்பதிவு
யுவனின் பின்னணி இசை
இடைவேளை காட்சிகள்
குறைகள்
திரைக்கதையில் தடுமாற்றம்.
overall rating – 3 / 5

Comments