சிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.சிந்து கருநாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.
இவர் நடித்த தமிழ் படங்கள் : சமுத்திரம், கடல் பூக்கள், யூத், ஈரம்
Comments
Post a Comment