ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
'சபாக்' படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட பெண்ணாக தற்போது நடித்து முடித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணியை தோற்கடித்து உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான அணி வென்றது.
இதை மையமாக வைத்து 83 என்ற படத்தை எடுக்கின்றனர். கபீர்கான் டைரக்டு செய்கிறார். கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில்தேவ் மனைவி வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. இறுதியாக தீபிகா படுகோனை தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரன்வீர் சிங் கூறும்போது, எனது மனைவியாக நடிக்க எனது மனைவி தீபிகாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றார். தீபிகா படுகோனேவுக்கு சில காட்சிகளே படத்தில் உள்ளன.
ஆனாலும் இதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ரூ.14 கோடி சம்பளம் பேசி உள்ளனர். இதுகுறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “83 படத்தில் முக்கியத்துவம் இல்லாத குணசித்திர வேடம் என்பதால் தீபிகா படுகோனே முதலில் தயங்கினார். கணவர் கதாநாயகன் என்பதாலும் அதிக சம்பளம் கொடுத்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றார்.
Comments
Post a Comment