பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’.யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்றது. சென்னையில் சில அரங்குகளில் காலை 8 மணி காட்சியும் இருந்தன. ஆனால் காலை காட்சிகள் ரத்தானது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் 10 மணி மற்றும் 11 மணி காட்சிகள் சில அரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment