2004 -ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "7ஜி ரெயின்போ காலனி". இந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது.
15 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காக மலால் படம், பத்மாவதி புகழ் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் மங்கேஷ் ஹதாவலே இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் தங்கை மகள் ஷர்மின் சேகல் நாயகியாகவும், நடிகர் ஜாவித் ஜஃப்ரியின் மகன் மிஸ்ஸான் ஜஃப்ரின் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மலால் படத்திலிருந்து 'ஐல ரே" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான பாரில் நாட்டிய நங்கையுடன் நாயகன் நடனமாடும் சில காட்சிகளுடனும், துள்ளல் இசையுடனும் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment