தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . வில்லு படத்திற்கு பிறகு விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி மாலை படத்தின் பெயர் மற்றும் பஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தை வெளியிடும் பொறுப்பை ஏஜிஎஸ் நிறுவனமே வைத்துக்கொள்வதாக இருந்தது. ஆனால் பிரபல விநியோகஸ்தரான ஸ்கிரீன் சீன் நிறுவனம்
விஜய்யின் பிகில் படத்தின் தமிழக உரிமையை ரூ.78 கோடிக்கு கேட்டுள்ளனர்.
இது குறித்து விஜய்யிடம் ஆலோசித்த தயாரிப்பு நிறுவனம் நல்ல தொகை கிடைப்பதால் அதற்கு ஓகே சொல்லிவிட்டனர். பிகில் படத்தில் தமிழக தியேட்டரிக்கள் ரைட்ஸ் ரூ.70 கோடி மற்றும் ரூ.8 கோடி ஜிஎஸ்டி சேர்த்து ரூ.78 கோடிக்கு வியாபாரத்தை முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மற்ற ஏரியாக்கள், வெளிநாட்டு உரிமையை தற்போதைக்கு தயாரிப்பு நிறுவனம் யாரிடமும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment