விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலைகாரன் ஜுன் 7 முதல்!

திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார்.
தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரம்ஜான் தினத்தன்று எதிர்பார்த்த அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இப்படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments