நடிகர் விஜயின் தளபதி 63 கண்டிப்பா ஹிட்!!

நடிகர் விஜயின் பிறந்த நாள்  ஜூன் மாதம் 22 ஆம் தேதியில் வர இருக்கிறது இதையடுத்து இவரின் ரசிகர்கள் பலரும் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.தளபதி 63 படத்திற்காக நடிகர் விஜய்யிடம் மேலும் 100நாள் call_Sheet கேட்ட நம் இயக்குனர் அட்லீ வரும் தீபாவளி அன்று இப்படத்தை
வெளியிடுவதற்காக அனைத்து பணிகளையும் வேகமாக செய்து வருகின்றார். பிரம்மாண்டமான செட் ஒன்று அமைத்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நடந்து வரும் தளபதி63 படப்பிடிப்பின் ஒரு புதிய அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.
 
அது என்னவென்றால் நடிகர் விஜய் இப்படத்தில் அப்பா & மகன் என இரு வேடங்களில் தோன்றுவார் என்பது தான். இது மட்டுமல்ல அப்பா விஜயின் படப்பிடிப்பே சென்னை செட்டில் நடந்து கொண்டிருக்கிறதாம். கத்தி திரைப்படத்தை அடுத்து இரு வேடங்களில் தளபதி 63ஆக இருக்கலாம் கண்டிப்பா இந்த திரைப்படம் வெற்றியை காணும் என்று ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். 

Comments