ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் முதலாவது போஸ்டர் அவருடைய பிறந்தநாளான நாளை வெளியாகிறது. இந்த படத்தில் மைக்கேல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே விஜய்யின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளையொட்டி, தயாரித்துள்ள போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரை கிளிண்டன் ரோச் வடிவமைத்ததாக முருகதாஸ் கூறியிருக்கிறார்
இதில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அடையாளச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தஞ்சை பெரியகோயில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், மெரினாவில் உள்ள காந்தி சிலை, சென்ட்ரல் ரெயில் நிலையம், கத்திபாரா மேம்பாலம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் சூழ, விஜய் வலது கரத்தை உயர்த்தி காட்டும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது.
Comments
Post a Comment