தீபாவளிக்கு மோதுகிறதா? சூப்பர் ஸ்டாரின் தர்பாரும், விஜய்யின் தளபதி 63ம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 63'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த படம் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்பட்டது.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், , ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' திரைப்படமும், விஜய்யின் 'தளபதி 63' திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து இயக்குநருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டுள்ளபடி இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருவதாகவும், இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், முன் கூட்டியே வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 'தளபதி 63' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு 'தளபதி 63' படத்தின் அப்டேட் சொல்லவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Comments