தளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது!
விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
விஜய்யின் 64-வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதே பொங்கல் தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் பொங்கலுக்கு ரஜினி- விஜய் படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment