விஜய் அட்லீ இயக்கத்தில் தெறி மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி 63 திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி shroff, கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது.இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில்.
ஜருகண்டி பட நடிகை ரெபா மோனிகா ஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது ஒரு ரசிகர், தளபதி-63 படத்தில் விஜய்யுடன் நடிக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரெபா நடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை பற்றியும் தளபதி-63 பற்றியும் கூறுங்கள் என கேட்க கிளாஸ் மற்றும் மாஸ் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment