60வது படத்திற்காக, வெளிநாட்டு, 'பிட்னஸ்' கலைஞர் ஒருவரை வரவைத்து 'ஸ்லிம்' ஆன அஜீத்!

அஜீத்குமாரைப் பொறுத்த வரை, 'மாஸ் ஹீரோ' என்பதால்,கதாபாத்திரங்களுக்காக, பெரிதாக மெனக்கெட மாட்டார். ஆனால், படத்துக்குப் படம், ஒரே மாதிரி, 'கெட் - அப்'பில் நடித்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதால், தன், 60வது படத்திற்காக, வெளிநாட்டு, 'பிட்னஸ்' கலைஞர் ஒருவரை வரவைத்து, அவரது ஆலோசனையின்படி, 'ஸ்லிம்' ஆகி இருக்கிறார். அதோடு, 'இனிமேல், நான் நடிக்கும் படங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து, ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்...' என்கிறார்.அஜீத்.

Comments