500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி!

2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மை தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, ‘Rowdy Baby Song reaction’, ‘Rowdy baby Cover’ (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ‘Song reaction’ பற்றி குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களை பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகள் வரை இது பரவியிருக்கிறது. 500 மில்லியன் பார்வைகளை தாண்டி அடுத்த கட்ட சாதனைக்கான வேகமான பாய்ச்சலில் உள்ளது ரௌடி பேபி. இதை வைத்து பார்க்கையில் ரௌடி பேபி காய்ச்சலை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சனம்.
 
பாடலில் வரும் தாள இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மாயஜாலம், உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த ஆழ்ந்த கூறுகள் தான் ஒரு பாடலின் பிரமாண்ட வெற்றிக்கான மந்திரம். யுவன் ஷங்கர் ராஜா இதில் தனது திறமையை மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக நிரூபித்தவர். அது ஒரு வேகமான துள்ளலான பாடலோ அல்லது மெலடி பாடலோ அவர் அதில் மாஸ்டராக திகழ்கிறார். மேலும், யுவன் எப்போதுமே ஒரு பாடலுக்கு ஏற்ற பாடல் வரிகள் மற்றும் குரல்களை சரியாக ஒருங்கிணைப்பதில் வல்லவர், அது தான் நமக்குள் ஒரு ‘திருவிழா’ உணர்வை உருவாக்குகிறது.
 
மேலும் ‘ரௌடி பேபி’ பாடலுக்கு ‘Poet-u’ தனுஷின் பாடல் வரிகளும் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறது. ‘தீ’ உடன் இணைந்து தனுஷ் பாடியதும் பாடலின் கூடுதல் ஈர்ப்புக்கு காரணம். அற்புதமான அரங்க அமைப்பு, இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் நடன அசைவுகள் தான் இன்னும் உலகெங்கும் உள்ள அனைவரையும் இந்த பாடலுக்கு ஆட வைக்கிறது. நிச்சயமாக, தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் திரை பிரசன்னம் தான் ‘ரௌடி பேபி’ பாடல் உலக அளவில் வெற்றி பெற முக்கிய பங்காக இருந்திருக்கிறது.

Comments