சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, தலைவரின் ரசிகர்களை குஷியாகியுள்ளது.ரஜினிகாந்த் ஒரு நடிகராக பலராலும் அறியப்பட்டாலும், அவரை உயிராக, உலகமாக, பார்க்கும் பல ரசிகர்கள் கோலிவுட் திரையுலகத்தில் உள்ளனர். பல ஆட்டோக்காரர்களுக்கும் இன்று அவர் ஒரு தோழனாகவும் , வழக்கட்டியாகவும் உள்ளார்.
அவரின் திரைப்படம் வரும் போதும், அதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவர்கள் வீட்டு விசேஷம் போல் கொண்டாடி மகிழ்வார்கள். அன்றைய தினம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.ஒரு கார்பென்டராக, தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து பின் பஸ் கண்டக்டர், வில்லன் நடிகர், என பல்வேறு சவால்களை கடந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முக்கிய காரணம் அவரின் கடின உழைப்பு. இதனால் இன்று இவருடைய புகழை நாடு கடந்தும் பலர் பேசுகிறார்கள்.
இந்நிலையில் இவரின் கடின உழைப்பையும், வெற்றியையும், குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில், 5 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் 'Rags To Riches Story ' என்கிற பாகத்தில் இவரைப்பற்றிய தகவல்களை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.இதில் சாதாரண மனிதராக வறுமையில் பிறந்து, பின் உலகம் வியர்ந்து பார்க்கக்கூடிய உச்சகட்ட பிரபலங்களாக மாறியவர்கள் பற்றிய தொகுப்பு பாடமாக இடம் பெற்றுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தவிர சார்லின் சாப்ளின், ஸ்டீவ் ஜாப், மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்...
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்த், தனது பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது தற்போது இணையத்தில் வரவேற்பு பெற்று வருகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எனது ஐ போனில் இருக்கும் ஒரே ஒரு கேண்டிட் புகைப்படம் இதுதான்” என்று குறிப்பிட்டு, தர்பார் பட கெட்டப்புடன், இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் அவர் குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
Comments
Post a Comment