49வது பிறந்த நாள்ளில்: அரவிந்த்சாமி நடிக்கும் புலனாய்வு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புலனாய்வு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.நடிகர் அரவிந்த்சாமிக்கு இன்று(ஜூன் 18) 49வது பிறந்த நாள். அதனால் அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக் கூடிய புதிய போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
 
ஹரஹர மஹாதேவிக்கு மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற உன்னதமான திரைக்காவியங்களை படைத்தவர் சந்தோஷ் ஜெயக்குமார். அதன்பின் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என படம் எடுத்தார். அப்போதே இப்படம் ஓடவில்லை எனில் மீண்டும் செக்ஸ் காமெடி எடுக்க சென்றுவிடுவேன் என மிரட்டினார். சொன்னது போலவே கஜினிகாந்த் ஊத்திக்கொண்டது.
 
சந்தோஷ் பி.ஜெயக் குமார். இவர் தற்போது அரவிந்த்சாமி நடிப்பில் கிரைம், டிடெக்டிவ் கதையொன்றை படமாக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த புலனாய்வு படத்தை எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Comments