நடிகர் சிரஞ்சீவி தற்பொழுது சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் இவருடன் சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
சிரஞ்சீவி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனரான கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் சுருதிஹாசன், தமன்னா, அனுஷ்கா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என டாப் நடிகைகள் இணைகிறார்கள் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளன.
இதில் சிரஞ்சீவியுடன் ரொமான்ஸ் கதாபாத்திரத்தில் தமன்னாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள், அனுஷ்கா, மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளன.
Comments
Post a Comment