மொரிஷியஸ் நாட்டில் அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்!

சினிமா பிரபலங்கள் எதைச் செய்தாலும் அது பிரபலம் ஆகிவிடும். தலையிலிருந்து பாதம் வரை அவர்கள் ஏதாவது செய்த ஹிட் ஆனால் அதுவே பேஷன். தமிழில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்காக நடனம் ஆடி தமிழில் அறிமுகமானவர் அடா சர்மா. அடுத்து பிரபுதேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் நாயகியாக நடித்தார்.

அவர் நடிக்க உள்ள 'தி ஹாலிடே' என்ற வெப் சீரிசுக்காக மொரிஷியஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். மூன்று வண்ண ஹேர்ஸ்டைலுடன் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். ஊதா, இளஞ் சிவப்பு, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களுடன் அவருடைய தலைமுடியை கலரிங் செய்துள்ளார். பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது.

“மொரிஷியசில் என்னுடைய 'தி ஹாலிடே' என்ற வெப் சீரிசுக்காக என்னுடைய புதிய ஹேர் கலர். இந்த ஹேர்ஸ்டைலைப் பார்த்து யாராவது பயன்படுத்தினால் எனக்கு காப்பிரைட் கட்டணத்தை அளிக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Comments