3 மாறுபட்ட கெட்-அப்களில் சித்தார்த் நடிக்கும் படம்!

இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘அருவம்’ இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். ‘வெற்றிவேல்’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களை தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்; நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சத்தமில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் படக்குழுவினர் ‘அருவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தனர். இப்போது
 
படத்தின் டிரைலரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த ஹாரர் ரக பமாக உருவாகி வரும் இப்படத்தில் சித்தார்த் மாறுபட்ட மூன்று கெட்-அப்களில் நடிக்கிறார் என்றும் அதைப் போல கேத்ரின் தெரெசாவுக்கும் இப்படத்தில் அவர் இதுவரை ஏற்று நடிக்காத மாறுபட்ட ஆக்‌ஷன் கேரக்டர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசாவுடன் சதீஷ், காளிவெங்கட், மதுசூதன் ராவ், கபிர் துஹான் சிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார்.   

Comments