பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் பாத்திமா, மதுமிதா, சாக்ஷி அகர்வால், வனிதா, சேரன், சரவணன், கவின் உள்ளிட்ட 15 பேர் பங்கேற்றுள்ளனர்.இன்று முதல் இவர்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பார்த்து ரசிக்கலாம்.
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.
 
இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக் கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது. இதன் காரணமாக திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நேற்று 23-ந்தேதி முதல் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
 
முதல் நாளான நேற்று 9 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 15 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அவர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்.
பிக்பாஸ் சீசன் 3-ன் போட்டியாளர்கள் வருமாறு:- பாத்திமா, லாஸ்லியா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, அபிராமி வெங்கடாச்சலம், வனிதா விஜயகுமார், ஷெரின், ரேஷ்மா ஆகிய 8 பெண் பிரபலங்களும், கவின், சரவணன், சேரன், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகேன் ராவ் ஆகிய 7 ஆண் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்

Comments