’பிக் பாஸ் 3’ யில் யோகி பாபுவின் காதலி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 இன்று துவங்குகிறது. இதில் போட்டியாளர்களாக மொத்தம் 17 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். இவர்களது பட்டியல் ஒன்று நேற்று வெளியாகி வைரலானது.இதில் இயக்குநரும் நடிகருமான சேரன், நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், ஷெரின், கவன், ஜாங்கிரி மதுமிதா, நடன இயக்குநர் சாண்டி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இவர்கள் அனைவரும் பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவும் பிக் பாஸில் பங்கேற்கிறார்.இவர் தான் யோகி பாபுவை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா, தற்போது நான் யோகி பாபுவை காதலிக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது, என்று கூறியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.

Comments