நாளை ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது பிக்பாஸ் தமிழின் சீசன் 3. நேற்று வெளியான புதிய ப்ரோமோவில்கமல் ஹாசன் 'கேள்வி கேக்க நா ரெடி! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா?' என கேட்டிருக்கிறார். இந்த சீசனின் முதல் ப்ரோமோவில் இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என்று கூறியிருந்தார். முதல் சீசனில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கூறியவர், 2வது சீசனில் நல்லவர் யார் கெட்டவர் யார், என்று கூறினார். அதுபோல இந்த சீசனுக்கு இவற்றில் எது டேக்லைன் என்று நாளை தெரிந்துவிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நாளைத் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 3-க்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால் இன்னும் இந்த சீனின் போட்டியாளர்கள் யார் என்று தெரியவில்லை. இருப்பினும் ராதாரவி, ஓகே ஓகே புகழ் ஜாங்கிரி மதுமிதா, பூனம் பாஜ்வா, செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு ஆகியோர் கண்டிப்பாக இடம் பெறுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
இரட்டை வசனங்கள் ஆபாச ஆடைகள் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு வழியாக அந்தப் பிரச்னையெல்லாம் முடிந்து தற்போது திட்டமிட்டது போல் வரும் ஞாயிறு முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.
முதல் இரண்டு சீசன்களில் நடிகர் கமல் ஹாசன் அவ்வபோது நடப்பு அரசியலை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சீசன் அவர் தேர்தலுக்கு பின் பங்குபெறும் சீசன் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இந்த சீசன் அவர் தேர்தலுக்கு பின் பங்குபெறும் சீசன் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Comments
Post a Comment