பிக்பாஸ் 3-வது தொடருக்காக மிகப்பிரமாண்டமான வீட்டின¢ செட் உருவாகி வருகிறது. தண்ணீர் சிக்கனம், கிராமப்புற கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரங்க அமைப்புகள் இந்த பிக்பாஸ் வீட்டில் இடம் பிடித்துள்ளன.ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரின் 3-வது அத்தியாயம் வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் துவங்க உள்ளது. கமல்ஹாசன் தான் இந்த தொடரிலும் பிக்பாஸ். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள 100 நாட்கள் தங்கவிருக்கும் 15 பிரபலங்கள் யார் என்பது நிகழ்ச்சியின் போது தெரிய வரும்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இவிபி கேளிக்கை வளாகத்தில் மிகப்பிரமாண்டமான செட், 2 ஏக்கரில் போடப்பட்டுள்ளது.
இந்த முறை பிக்பாஸ் வீட்டை இயற்கையும், சுற்றுச்சூழலும் இணைந்த கிராமத்தை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துவது போல அரங்கத்தை அமைத்து வருகின்றனர்.வீட்டுக்குள்ளே நுழைந்தவுடன் பழைமையை பறைசாற்றும் வகையில் ஒரு பிரமாண்டமான கோயில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள சந்தை, தெருக்கள், அந்த தெருக்களில் செல்லும் சைக்கிள்கள், வண்டிகள் ஆகியவையும் வரையப்பட்டுள்ளன.
அது தவிர 10 தலை ராவணன் படம் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. கரகம், பரதம், பொம்மலாட்டம் போன்ற நடனக்காட்சிகளை பிரதிபலிக்கும் படங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீட்டில் ஒரு பக்கத்தில் ஒரு சிறையும் உள்ளது. அங்கு ஒரு சிறிய கழிவறையும், குடிப்பதற்கு மண்பானை தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இடதுபக்கத்தில் பெரிய மீசையுடன் வீச்சரிவாளை வைத்திருக்கும் ஒரு மனிதனின் படம் காணப்படுகிறது.

வீட்டின் ஹாலில் விருமாண்டி கமல்ஹாசனின் பிரமாண்டமான படம் வரையப்பட்டுள்ளது. அதுக்கு பக்கத்துல கால் மேல கால் போட்டு படுத்திருக்கும் பேட்ட ரஜினியின் படமும் உள்ளது.வீட்டின் சமையலறை நடமாடும் சமையற்கூடமாக அமைந்துள்ளது. முன்பெல்லாம் வீட்டிற்குள் இருப்பவர்கள¢ செவ்வக வடிவமான மேஜையில் உணவு அருந்துவார்கள். இப்போது அது வட்டமேஜையாக வடிவம் மாறியுள்ளது.
தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்துவது போல வாஷ்பேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை தவிர கிராமங்களில் நாய்கள் குரைப்பது போன்ற சத்தங்கள் இந்த பிக்பாஸ் வீட்டிலும் ஸ்பெஷல் எபெக்டாக கேட்டு கொண்டிருக்கும்.
இதை தவிர கிராமங்களில் நாய்கள் குரைப்பது போன்ற சத்தங்கள் இந்த பிக்பாஸ் வீட்டிலும் ஸ்பெஷல் எபெக்டாக கேட்டு கொண்டிருக்கும்.
Comments
Post a Comment