பிக்பாஸ் 3 வருமா? வராதா? உருவானது புதிய சிக்கல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனை எட்டியுள்ளது. 3-வது முறையாக கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
 
எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

Comments