பிக்பாஸ் 3-வது சீசன் வரும் 23-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்க உள்ளார். இதில் பங்கேற்க உள்ள 15 போட்டியாளர்கள் யார் யார் என தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் பங்கேற்ற நடிகை ஓவியா பரபரப்பாக பேசப்பட்டு புகழின் உச்சத்திற்கு சென்றார்.
ஆரவ் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவியத்தொடங்கியது. பின்னர் பிக்பாஸ் 2-வது சீசனில் சிறப்பு விருந்தினராக ஓவியா வீட்டிற்குள் சென்றார்.இந்நிலையில், 3-வது சீசனிலும் ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் குழுவில் இருந்து இதற்கான அழைப்பை ஓவியாவிற்கு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment