யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வது போல, தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. 2012-ல் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான இவருக்கு நிறைய எதிர்மறை கமெண்ட்டுகளே பரிசாகக் கிடைத்தன. அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப்படமும் இவருக்கு அமையவில்லை.
இந்த நிலையில்தான் எதிர்பாராத ஜாக்பாட்டாக தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக மகரிஷி படத்தில் நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. படமும் எதிர்பார்த்த வெற்றியை அடைய, தற்போது பூஜாவின் மார்க்கெட் பிக்கப் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு முன்பே ஜிகர்தண்டா பட தெலுங்கு ரீமேக்கில் லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிக்க பூஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர்.. ஆனால் தற்போது மகரிஷியின் வெற்றியால் தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி விட்டார் பூஜா ஹெக்டே.

Comments
Post a Comment