ஆடை படத்திற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆடையில்லாமல் அமலாபால் நடித்துக் கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல், டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், ஒரு தாய் தன் மகளைத் தேடுவது போன்ற காட்சிகளுடன் ஆரம்பமான அந்த டீசரின் இறுதியில், பிறந்தமேனியாக அமலாபால் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அதோடு படத்தின் போஸ்டர்களிலும் அமலாபால் உடதணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் அமலாபால், ஆடையில்லாமல் வரும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. இதற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் அமலாபால் ஆடையில்லாமல் நடித்துக் கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லில் காயங்களுடன் ஆடையில்லாமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் தான் உள்ளன. இதன் மூலம் படத்தில் அவர் துணிச்சலாக பல காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த முன்னணி நடிகையும் நடித்தது இல்லை எனக் கூறப்படுகிறது.
அமலாபாலின் இந்த துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சமந்தா உள்பட திரையுலகைச் சேர்ந்தவர்களும் அமலாபாலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த டீசர் வெளியாகி சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ‘ஆடை' டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தானாம். அதை தாண்டி, பைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளாராம். நிச்சயம் அமலாபாலின் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
Comments
Post a Comment