20ம் தேதி முதல் தொடங்குகிறது ஜெயம் ரவியின் புதிய பட சூட்டிங்!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பெயரிடப்படாத 25வது படத்தின் சூட்டிங் குற்றாலத்தில் வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரோமியோ ஜூலியட் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் லக்ஷமன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தில் நிதினி அக்வர்வால் ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை அடங்க மறு படத்தை தயாரித்த ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். பாலிவுட் நடிகர் ரோகித் ராய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Comments