1985-90-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்த சுமன் ரங்கநாதன் தற்போது 2வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நடிகை சுமன் ரங்கநாதன், 1980-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமாக இருந்தார். நடிகர் சங்கர்நாக் நடித்த ‘சி.பி.ஐ. சங்கர்’ படத்தில் சுமன் ரங்கநாதன் நடித்தார். நடிகர் அம்பரீசுடன் ‘கோகிலே கோகிலே’ படத்தில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் வாலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்து 2007-ம் ஆண்டு சுமன் ரங்கநாதன் விவாகரத்து பெற்றார்.
பின்னர் 12 ஆண்டுகள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் 44 வயதாகும் நடிகை சுமன் ரங்கநாதன், குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கன்னடம் மட்டுமின்றி பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
Comments
Post a Comment