19 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு:, ரஜினிகாந்த் குறித்து உணர்ச்சிபூர்வமான ட்வீட் !

நடிகர் ரஜினி காந்தின் 167வது படமான தர்பார் திரைப்படத்தை  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநயாகியாக நயன்தாரா நடித்துவருகிறார்.  அனிரூத் இசையமைக்க,  சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளனர்.  

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்,  தர்பார் திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஸ்ரீமன்  ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீமன்.  அதில்  "19 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் திரையுலக வாழ்வில் முதன் முதலில் ஒரே ஒரு சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

Comments