நடிகை ப்ரியா பவானி இப்படியா? 18 வயதில் பார்த்த அந்த மாதிரி படம்! ஓபன் டாக்!

18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன், என வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.சின்னத்திரையிலிருந்து,  வெள்ளித்திரைக்கு வரும் கதாநாயகர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள், என்பதை முறியடித்து சின்னத்திரையில் இருந்து வரும் நடிகைகளாலும், வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியும் என தன்னுடைய நடிப்பால் நிரூபித்து காட்டியவர், நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
 
ஒரு செய்தி வாசிப்பாளராக மக்களால் அறியப்பட்டு பின், சின்னத்திரையில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை'  என்கிற சீரியலில் கதாநாயகியாக மாறியவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.  இவருக்கு எதிர்பாராத விதமாக வந்தது தான் வெள்ளித்திரை வாய்ப்பு.  அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக மாறியுள்ளார். 
 
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மான்ஸ்டர்' திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுக்கடுக்காக பல படங்களில் இவரை கமிட் செய்ய இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள்.  கதை பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் ப்ரியா.
 
இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொல்ல முதலில் தயக்கம் காட்டிய ப்ரியா,  பின் 18 வயதில் கல்லூரி விடுதியில் பார்த்தேன் என கூறியுள்ளார். அதற்கு காரணம் சீனியர் அக்கா ஒருவர் என்றும், 18 வயது உனக்கு ஆகி விட்டது எனக் கூறி தன்னை பார்க்க வைத்தார் என்றும் ஓப்பனாக பேசியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.

Comments