18 வருடங்கள் ஆகிய சிட்டிசன்.. பிரபல இயக்குனர் போட்ட ட்வீட் !

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஆனால் சிட்டிசன் படம் வந்து 18 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
அஜீத்தின் தீவிர ரசிகரும் AAA படத்தின் இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன். அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் நீங்க தான் தனி ஆள் இல்லை என்ற டயலாக்கை கேட்கும்போது புல்லறிபதாகவும் நடிப்பு, கெட்டப்புகள் மற்றும் கிளைமாக்ஸ்கள் இன்னும் பல விஷயங்கள் எப்போதுமே எங்களுக்கு ஸ்பெஷல் தான் என பதிவிட்டுள்ளார்.

Comments