16 ஆண்டுகள், ‘ஜெயம்’ ரவியின் 25-வது படத்தின் அப்டேட்!

Jayam Ravi 25th Movie Pooja and 16th Year Celebration Photos...ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் லக்‌ஷமணும், ‘ஜெயம்’ ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. ‘ஜெயம்’ ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 16-ஆண்டுகள் ஆகிறது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி ‘ஜெயம்’ ரவிக்கு வாழ்த்துக் கூறி கொண்டாடினர். இந்த படம் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தற்காலிகமாக் ‘ஜெயம்’ ரவி-25’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ‘அடங்கமறு’ படத்தை தயாரித்த ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இது இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பா
கும். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் சரண்யா ரோனித் ராய், தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை சந்துரு எழுதியுள்ளார். டி.இமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை டட்லி கவனிக்கிறார். படத்தொகுப்பை ஜான் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் செய்கிறார். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ விரைவில் ரிலீசாக இருக்கிறது.







Comments